அம்முவின் தந்தையாக
இந்த எனது வலைத்தளத்தின் வாயிலாக, தமிழ் கூறும் வலையுலகு நண்பர்களின் தொடந்து கொண்டேயிருக்கும் சிறப்பான ஆதரவோடு. சிலபல மாணவர்களின் கல்விக்கு உதவ முடிந்தது.
உதவி கேட்டு அவர்கள் வந்தபோது, அந்த ஏழை மாணவர்கள் 12-ஆம் பொதுத்தேர்வில் (எ.கா: கௌசல்யா, மொஹம்மட் ஆசிக்....) எடுத்த மதிப்பெண்களை பார்த்து, மகிழ்ச்சியோடு, மிக்க பிரமிப்பும் அடைந்திருக்கிறேன்.
அதே பிரமிப்பை, இன்று என் மகள் எனக்குத் தந்திருக்கிறாள். 1185/1200 எடுத்து சென்னை மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறாள்! டிவிட்டரிலும், மடல் / தொலைபேசி வழியும் வாழ்த்துரைத்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
20 மறுமொழிகள்:
எ.அ.பாலா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் சாதனைப்படைக்க வாழ்த்துக்கள்!
பள்ளிக்காலத்தில் நானெல்லாம் என்னதான் முக்கியும் 90 தொடவே நொறைத்தள்ளியவன் என்பதால் near perfect ஆக அதிகமதிப்பெண் எடுப்பது எவ்வளவு கடினமான காரியம் என மார்க் எடுக்காத எங்களப்போன்றவர்களுக்கு தான் தெரியும் , பசங்க பாடு ஒரு பக்கம் பெற்றோர்களுக்கு மனாழுத்தம் இன்னொருபக்கம் வாட்டும் அவ்வ்!
# உங்களுக்கு +2படிக்கிற வயசில பசங்க இருப்பதே சர்ப்பரைஸ் எனக்கு!!!
வவ்வால்,
மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் நல்வாழ்த்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது! உண்மையை சொல்லவேண்டுமெனில், எனக்கு பெரிய மன அழுத்தம் எல்லாமில்லை. இதில் என் பங்கும் பெரிதில்லை, அவள் அம்மாவின் பங்கு பெரிது! அவளது திட்டமிடலும், அசாத்திய உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம். அவற்றுக்கு தக்க பலன் கிடைத்ததால், எனக்கும் அதிக மகிழ்ச்சி என்பதை மறுக்க முடியுமா :)
//# உங்களுக்கு +2படிக்கிற வயசில பசங்க இருப்பதே சர்ப்பரைஸ் எனக்கு!!!//
2004-ல் எழுதிய எனது பிளாக் பயோடாட்டாவில், எனக்கு “ஒரு மனைவி, 2 மகள்கள்” என்ற உண்மையை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்லியிருக்கையில், உங்களுக்கு ஏன் ஆச்சரியம் என்று புரியவில்லை!
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது நிரூபணம்...
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள் . இறைவன் அருளால் மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
Congratulations Madhumita. Good luck for your Medicine program.
CT
Vijayashankar,
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு :)
boopathy perumal,
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு
//ramachandranusha(உஷா)said...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
//
நன்றி எழுத்தாளரம்மா :) உங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உதவியது....
Bala,
மிக்க நன்றி பாலா!
CT,
Thanks for your heartfelt wishes! Yes, her first choice is medicine and now she has a good chance to realize what she wanted to pursue as a career!
வாழ்த்துக்கள்
Bala
I felt proud when I heard the news, as I have seen Ammu growing from childhood,I never had any doubt in my mind that she is destined for this and more.One more thing amazes me is her leadership quality.God bless her.
Sankar
Sir,
as usual i'm late.
My best wishes and hope ur daughter will become a good doctor and serve the needy.
-Abul
//J Mariano Anto Bruno Mascarenhas said...
வாழ்த்துக்கள் //
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகள் பெரிய ஊக்கமாக அவளுக்கு அமையும்!
Sankar,
I know you always had the confidence (more than what I had!) in her abilities :)
Abul,
Long time :) Many thanks for your kind wishes..... Hope you are fine...
Most sincere congratulations to your daughter, and her parents.
//RAJI MUTHUKRISHNAN said...
Most sincere congratulations to your daughter, and her parents.
//
Thanks for your appreciation and wishes, Madam....
Post a Comment